பதிவோட தலைப்ப பாத்தவொடனே என்னாடா இது தமிழ் மாதிரியே தெரியலேன்னு முழுக்கறீங்களா! நீங்க முழிக்கறது நியாயம் தாங்க. இது தமிழ் இல்ல, சுந்தரத் தெலுங்கு. சமீபத்துல ரிலீஸான தெலுங்கு படத்தோட டைட்டில் தான் இது. படத்தோட டைரக்டர் வேற யாரும் இல்லங்க, நம்ம செல்வராகவன் (தெலுங்குல ஸ்ரீராகவன்) தான். போன வாரம் ரிலீஸ் ஆகி செம போடு போட்டுக்கிட்டு இருக்காம் இந்த படம். ஹீரோவா வெங்கடேஷ், ஹீரோயினா த்ரிஷா. இத தவிர ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த், காமெடிக்கு சுனில், சாமி வில்லன் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் எல்லாம் நடிச்சிருக்காங்க. இசை வழக்கம்போல யுவன் தான்.

இதே படத்த தான் யாரடி நீ மோகினி ன்னு தமிழ்ல எடுக்கராறு செல்வராகவன்கிட்ட உதவி இயக்குனரா இருந்த ஜவஹர். வெங்கடேஷ் கதாப்பாத்திரத்துல தனுஷ், த்ரிஷா கதாப்பாத்திரத்துல நயன்தாரா, ஸ்ரீகாந்த் கதாப்பாத்திரத்துல கண்ட நாள் முதல் புகழ் கார்த்திக் நடிக்கறதா இது வரயும் சொல்லிருக்காங்க. சாயாசிங் கூட ஒரு ரோல்ல நடிக்கறதா பேச்சு அடிபடுது. தெலுங்கு படத்தோட கதைய இணையத்துல படிச்சேன். எப்படியும் இதே கததான் தமிழ்லயும் வரப்போகுதுங்குற தெனாவட்டுல (படத்தோட ரிலீஸுக்கு முன்னாடி) கதய லீக் பண்ணலாமேன்னு தான் இந்த முயற்சி
.

கதை:
|
வெங்கடேஷ் (கணேஷ்) வேல தேடிக்கிட்டுருக்குற ஒரு இளைஞன். இவரோட அப்பா கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஒரு வாத்தியார். வெங்கடேஷ அம்மா ஸ்தானத்துல இருந்து இவர் பாத்துக்கராரு. கணேஷோட ஃபிரண்ட்ஸ் எல்லாரும் நல்ல வேலைல செட்டில் ஆகிடறாங்க. ஆனா கணேஷ் மட்டும் கிட்டதட்ட பத்து வருஷமா (அடேங்கப்பா!) வேல தேடுறாரு. வேல தேடிக்கிட்டுருக்கற சமயத்துல இவரோட கண்ல த்ரிஷா (கீர்த்தி) படவே… இவருக்கு காதல் பொத்துக்கிட்டு வந்திடுது. விசாரிச்சு பாத்து, கீர்த்தி ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேல பாக்கறாங்கன்னு தெரிஞ்சுக்கராரு கணேஷ். உடனே அவரும் மல மலன்னு கம்பியூட்டர் கத்துக்கிட்டு அதே கம்பெனில வேலைக்கு ட்ரயினியா சேர்றாரு (அடப்பாவிகளா!). நெனச்சபடி கீர்த்தியோட ப்ராஜெக்ட்லயே சேர்றாரு. கீர்த்தி அதாவது த்ரிஷா தான் ப்ராஜெக்ட் மேனஜராம் (ப்ளீஸ், யாரும் கோவப்படாதீங்க!). படம் பாக்கற சாப்ட்வேர் மக்கள் எல்லாரும் யாரு காதுலடா பூ சுத்துறீங்க ன்னு கேக்கறாங்களாம். அந்த அளவுக்கு எந்த ஒரு சாப்ட்வேர் கம்பெனிலயும் நடக்காத விஷயத்தெல்லாம் காட்டிருக்காங்களாம். நம்ம ஹீரோ மட்டும் ப்ராஜெக்ட்காக ராத்திரியெல்லாம் கண்ணு முழுச்சு வேல பாக்கற மாதிரி காட்சியெல்லாம் இருக்காம். |
![]() |
கணேஷுக்கும், கீர்த்திக்கும் கம்பெனி மூலமா ஆஸ்ட்ரேலியா போக வாய்ப்பு கிடைக்குது (இதெல்லாம் சாப்ட்வேர் வாழ்க்கைல சகஜமப்பா
). இதாண்டா சமயம்னு தன்னோட காதல கீர்த்திகிட்ட சொல்றாரு கணேஷ். அத கேட்ட கீர்த்தி தனக்கு ஏற்கனவே தன்னோட மாமாவோட நிச்சயம் ஆயிடிச்சுன்னு சொல்லி, மனசுல வீணா ஆசய வளத்துக்க வேண்டாம்னு வழக்கமான டயலாக் பேசறாங்க. இத கேட்ட கணேஷ் ரொம்பவே மனசொடஞ்சு போயி தன்னோட அப்பாகிட்ட நடந்தத சொல்றாரு. தன்னோட மகன் ஆசப்பட்ட வாழ்க்கய அமச்சு கொடுக்கனும்னு அப்பா கீர்த்திக்கிட்ட போய் பேசுறாரு. இதனால கோவம் வந்து கணேஷயும், அவங்க அப்பாவயும் கீர்த்தி கை நீட்டி அடிச்சுடறாங்க. அன்னக்கி ராத்திரி கணேஷோட அப்பா மாறடைப்பால இறந்து போயிடறாரு. கணேஷ் தனிமரமா அயிடுறான். கணேஷ் கவலய மறக்கடிக்க அவரோட ஃப்ரண்ட் வாசு (ஸ்ரீகாந்த்) கணேஷ தன்னோட ஊருக்கு கூட்டிட்டு போறாரு. அங்க போனதுக்கு அப்பறம் தான் வாசு கீர்த்தியோட மாமான்னு கணேஷுக்கு தெரிய வருது. ஒரு கட்டத்துல வாசுவோட தங்கச்சிக்கு கணேஷ் மேல காதல் வளர, அத ஏத்துக்க் முடியாத கீர்த்தி தன்னோட காதல கணேஷ்கிட்ட சொல்றாங்க. ஆனா தியாகி கணேஷ் தன்னோட காதலால சந்தோஷமா இருக்குற இந்த குடும்பத்துல பிரச்சன வேண்டாம், என்ன மறந்துடுன்னு சொல்றாரு. இது எப்படியோ வாசுவோட தாத்தாவுக்கு தெரியவர குடும்ப மானத்த கப்பலேத்திட்டியேன்னு கீர்த்திய திட்டுறாரு. இதுக்கு அப்பறம் யார் யாரோட சேர்றாங்கிறது தான் க்ளைமாக்ஸாம்.
படத்துல கணேஷ் கதாப்பாத்திரத்துக்கு நடிக்க நல்ல வாய்ப்பு இருக்காம். தனுஷ் கண்டிப்பா பிண்ணிருவாரு. ஆனா பத்து வருஷமா வேல தேடுற லாஜிக்கெல்லாம் அவருக்கு ஒத்து வராது. ஜவஹர் சார், இந்த மாதிரி விஷயத்தெல்லாம் கொஞ்சம் மாத்திருங்க ப்ளீஸ்!
கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைலயும் குடும்பத்தோட பாக்க வேண்டிய நல்ல படம்னு விமர்சனம் பண்ணிருக்காங்க. என்னாது! செல்வராகவன் படம் குடும்பத்தோட போய் பாக்கலாமா ன்னு வாயப்பொளக்காதீங்க
. கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் மனுஷன் திருந்திட்டார் போலத் தெரியுது. குடும்பஸ்தன் ஆயிட்டதனாலயோ என்னமோ வழக்கமா அவர் படத்துல வர்ற விரச காட்சி எதுவுமே இந்த படத்துல இல்லியாம். படத்துக்கு சென்சார் U சான்றிதழ் குடுத்திருக்காங்களாம். செல்வராகவன் படத்துக்கு U சான்றிதழா? கேக்கவே ஆச்சர்யமா இருக்குல்ல
. தமிழ்ல படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ஜவஹர் சார்.





