களஞ்சியம்

பார்த்தது… கேட்டது… படித்தது…

என்னப்பத்தி

என்னோட முழு பேர் “ரத்தன் ராஜா ராஜேந்திரன்”. பேர கேட்ட உடனே “ஓ ‘triple R’ ஆ”னு தான் எல்லாரும் கேப்பாங்க. “ரத்தன்” ஆ… என்னாங்க சேட்டுப்பய்யன் பேரு மாதிரி இருக்குன்னு கூட நிறைய பேர் கேட்டிருக்காங்க. என்னோட சொந்த ஊர் தமிழ் மணம் மாறாத ”மதுரை”.  “தூங்கா நகரம்” , “கோவில் நகரம்” னும் கூட சொல்லுவாங்க.  படிச்சது பி.இ. கம்பியுட்டர் சயின்ஸ். சென்னைல ரெண்டு வருஷம்  ஸாப்ட்வேர் இஞ்சினிய்ரா வேல பாத்தேன். இப்ப அமெரிக்காகாரனுக்கு நெறையா சம்பாரிச்சுக் கொடுத்து நானும் நெறையா சம்பாரிக்கனும்னு “அமெரிக்கா” வில அதே வேலய பாத்துக்கிட்டு இருக்கென்.  என்னாதான் அமெரிக்காவில இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊரு தாங்க.

எனக்கு பிடிச்ச விஷயங்கள்… ம்ம்… இதுக்கு ஒரு list போட்டாகனுமே…  

1.  ஃப்ரண்ட்ஸோட நேரம் செலவழிக்கறது,  அதுபோன்லனாலும் சரி… நேர்லனாலூம் சரி… விட்டா நாள் கணக்குல போய்ட்டு இருக்கும்.

2. எக்ஸசயிஸ் பண்றதுன்னா எனக்கு அவ்வள்வு இஷ்டம்.

3. நெறய தழிழ் சினிமா பாட்டு கேப்பேன். பாட்டு கேக்கறது மட்டுமில்ல நெறய சேத்து வெப்பேன். அதெ மாதிரி தான் படமும். இந்த வகையில internet க்கு என்னோட நன்றி.

4. வீட்ட சுத்தமா வச்சுக்கறதுல எனக்கு ரொம்ப ஈடுபாடு உண்டு.

5. ஜோ… ஜோ… ஜோதிகா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு படம் விட மாட்டேன். “குஷி” படம் கிட்டதட்ட 100 தடவைக்கு மேல பாத்திருப்பேன் :-P     

6. நான் சமைச்சுப் போடறத சாப்பிடறதுக்கு ஆள் இருக்குறதுனாலயோ என்னவோ… இப்ப ஒரு வருஷமா சமையல் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமாயிடுச்சு…

இப்போதைக்கு இவ்வளவு தாங்க…  

13 பதில்கள் -க்கு “என்னப்பத்தி”

  1. Priya சொன்னார்

    களங்சியமா இல்லை களஞ்சியமா???

  2. ரத்தன் சொன்னார்

    மானத்தக்காப்பாத்தினதுக்கு நன்றி ப்ரியா… அது களஞ்சியம் தான்… மாத்திட்டேன்…

  3. பிரியா சொன்னார்

    ;) m again ஒரு சின்ன spelling mistake என்னப் ப்த்தி இல்ல
    என்னப் பத்தி…

  4. ரத்தன் சொன்னார்

    ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல… :-) ம்ம்ம்… ரைட்டு.
    மருபடியும் நன்றி…

  5. giri சொன்னார்

    Hey Rathan, nice to see this…keep updating. Konjam English version irundha nalla irukkum anu feel pandre, padikka romba kashtapatte….:(

  6. ரத்தன் சொன்னார்

    கண்டிப்பா கிரி சிலது english லயும் இருக்கும்… ஆனா தமிழுக்குதான் முதலிடம்… ;-)

  7. puthiyavan சொன்னார்

    very good

  8. ரத்தன் சொன்னார்

    நன்றி! புதியவன்.

  9. Raghavan சொன்னார்

    கலக்கல் ரத்தன்.. நல்லா சுவைப்பட எழுதியிருக்கீங்க..

    வாழ்த்துக்கள்..

    மதுரைக்கார மச்சானுக்கு மஸ்து ஜாஸ்தி தானுங்களே!!!

  10. Sridhar சொன்னார்

    வணக்கம் ரத்தன்,

    உங்கள் commentsa priyaவோட பதிவுகளில் பார்த்து இருக்கேன், ஆனா உங்கள் வலை பதிவுகளை இன்றுதான் பார்த்தேன். இவ்வளவு நாளா உங்க பதிவுகளை பார்க்காமல் மிஸ் பண்ணிட்டேன். மிகவும் அருமை. இப்பணி தொடரட்டும். என்னப் பத்தி = என்னப்பற்றி இதுதான் சரி. ;)

  11. Sridhar சொன்னார்

    மன்னிக்கவும். என்னைப்பற்றி.

  12. ரத்தன் சொன்னார்

    நானும் உங்க commentsa பாத்துருக்குக்கேன்.

    சரலமா பேசற தமிழ்ல இருக்கட்டுமேன்னு தான் நான் அப்படி வச்சேன். நான் பதிவு போட்டு 4 மாசத்துக்கு மேல ஆகுது. மறுபடியும் ஆரம்பிக்கனும். கூடிய விரைவில் ஆரம்பிக்கறேன். உங்க பின்னூட்டதுக்கு நன்றி…

  13. kapilashiwaa சொன்னார்

    நான் இப்பதான் உங்களோட வலைபதிவுகளை பார்த்தேன். நல்லா இருக்கு
    தொடர்ந்து எழுதுங்க சார்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>