எப்படி தமிழ்ல எழுதறது?
என்னோட பதிவுகள பாத்திட்டு ஃபிரண்ட்ஸ் நெறய பேர் கேக்கிற மொதோ கேள்வி எப்படி தமிழ்ல எழுதற?.
அட இது ஒன்னும் கம்பசூத்திரம் இல்லன்னு ஒவ்வொருத்தருக்கா சொல்லி சொல்லி மாளல. அதுனாலதான் இந்த பக்கம். இதுக்கு நான் உபயோகப்படுத்தற மென்பொருள் இ-கலப்பை (அஞ்சல்). இதோட பீட்டா பதிவு இலவசமா கிடைக்குதுங்க. நீங்க பண்ணவேண்டியது எல்லாம் இதான்
1) http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=3 ல இருந்து இ-கலப்பை இன்ஸ்டாலபல் டவுன்லோட் பண்ணுங்க.
2) இன்ஸ்டால பண்ணி முடிச்ச உடனே உங்களோட சிஸ்டம் ட்ரே ல கே ன்னு ஒரு ஐக்கான் வந்திருக்கும். அதான் இ-கலப்பை யோடது.
3) இப்ப நீங்க உங்க கீ-போர்ட்ல Alt + 2 பட்டன அமுக்குங்க. அந்த கே ஐக்கான் இப்ப அ னு தமிழ் எழுத்தா மாறிருக்கும்.
4) அவ்வளவுதாங்க! இப்ப நீங்க சாதாரணமா தங்கலீஷ் ல டைப் அடிக்கற மாதிரி அடிக்கலாம். உங்களுக்காக சில வார்த்தைகள இதோ கீழ
a – அ
aa – ஆ
ca – ச
ng – ங்
nj – ஞ்
w – ந்
sh – ஷ்
S – ஸ்
z – ழ்
எ.கா:
போடா டுபுக்கு – pootaa tubukku (or) pOdA dubukku
எங்கிட்ட வச்சிக்காத – engitta vacciggaatha (or) engitta vaccigAtha
பிச்சிருவேன் பிச்சு – picciruveen picci (or) picciruvEn picci
இது உங்களுக்கு உபயோகமா இருந்திருக்கும்னு நெனக்கறேன். ம்ம்ம்… அப்பறம் என்ன பட்டயக் கிளப்ப வேண்டியது தான!

Natty சொன்னார்
Rathan kalakitae po.. ennoda suggestion.. also try to learn tamil 99 keyboard mapping. inaiezhuthukkal ellam pakkathulaeyae irukku,… so typing will be easy and very fast.. like.. tha and na / pa and ma… i shall forward the downloads (poyya should be having the tamil cd).. very proud of u dude… vazhthukkal…
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.
Rathan சொன்னார்
ரொம்ப நன்றி நட்டு அவர்களே… (எத்தன நாளைக்கு தான்… நேட்டி… நேட்டி ஸ்டயிலா… சொல்லிக்கிட்டு திரியுவீங்க…
). நீங்க வந்தது மிக்க மகிழ்ச்சி. கூடிய விரைவில் உபுண்டுனு ஒன்ன பத்தி இந்த தளத்துல போடுவேன். பாருங்க…
vinodg சொன்னார்
this page is rated with 5 stars
ரத்தன் சொன்னார்
அட வினோத்து, வாங்க வாங்க! 5 ஸ்டார் ரேட்டிங் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி.
பாலாஜீ சொன்னார்
செயல்முறை விளக்கம் அற்புதம் நன்றி ரத்தன்
Balaji சொன்னார்
நன்றி ரத்தன்.