ப்ரான்ஸ்ல அடிக்கப் போகுது நம்ம ஊரு “வெயில்”
பதிந்தவர் ரத்தன் மேல் April 4, 2007
உலகத்துலயே ரொம்ப பெருமயான “அகில உலகத் திரைப்பட விழா”னு கருதப்படறது “கேன்ஸ் திரைப்பட விழா”. அதோட 60ஆவது விழா இந்த வருஷம் ப்ரான்ஸ் நாட்டு “துலூஸ்” நகரத்துல வர்ற மே மாசம் 16 ஆம் தேதில இருந்து 27ஆம் தேதி வரயும் நடக்கப்போகுது. அதுல நடக்குற “ஆல் த சினேமாஸ் ஆப் தி வேல்டு” கிற நிகழ்ச்சில உலகம் முழுவதும் தயாரிக்கப்பட்ட சிறந்த படங்கள திரையிடுவாங்களாம். கிட்டத்தட்ட 30,000 படத்துக்கு மேல திரையிடுவாங்களாம். 1,000 இயக்குனருங்க, 5000 தயாரிப்பாளருங்க, 4000 விநியோகஸ்தருங்கன்னு எல்லாரும் கலந்துக்குவாங்களாம். இப்ப மேட்டர் அது இல்ல…. கொஞ்ச நாலைக்கு முன்னால ரிலீஸ் ஆயி சக்க போடு போட்டது மட்டும் இல்லாம நெறய பேரோட “சபாஷ்” ஐயும் வாங்கின “வெயில்” படம் நியாபகம் இருக்கா… அத எப்படி ம்றக்கமுடியும்குறீங்களா… அந்த “வெயில்” படம் இந்த விழாவில திரையிடறதுக்கு தேர்ந்தெடுத்துருக்காங்களாம்… மே 19ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு திரையிடறாங்களாம்.
2005 ல நடந்த “சைப்ரஸ் அகில உலகத் திரைப்பட விழா” வுல “ராம்” படம் ரெண்டு அவார்டு வாங்கினது தமிழ் சினிமாவுக்கு உலக அளவுல கிடைச்ச முதல் அங்கீகாரம். இப்ப இதோ இன்னொன்னு. கண்டிப்பா நாம எல்லாரும் பெரும பட்டுக்க வேண்டிய விஷயதான். இயக்குனர் வஸந்தபாலன் கிட்ட கேட்டா “எல்லாப் புகழும் சங்கர் சாருக்கே” ங்கறாராம். ம்ம்ம் ஆஸ்கார் தான் வாங்க முடியல… பாக்கலாம்.
பி.கு: நம்ம “அழகி” தங்கர்பச்சானோட “பள்ளிக்கூடம்” கூட அனுப்பி வச்சாங்களாம். என்ன ஆச்சோ தெரியல… “பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” பச்சான் …

