களஞ்சியம்

பார்த்தது… கேட்டது… படித்தது…

இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்: நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

பதிந்தவர் ரத்தன் மேல் ஏப்ரல் 6, 2007

ஏப்ரல் 06, 2007

நாகப்பட்டனம்: கோடியக்கரை அருகே நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் காயமடைந்தார்.

தமிழக மீனவர்களை குறி வைத்து சமீப காலமாக இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக சுடுவது அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 மீனவர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு இதில் தீவிரமாக செயல்பட்டு இலங்கையை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

ஆனால் மத்திய அரசின் சார்பில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் இல்லை. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏ.கே.ஆண்டனியிடம் இதுகுறித்து கேட்டால், இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சுட வேண்டிய அவசியம் இல்லை என்று இலங்கை அரசின் அமைச்சர் போல பதிலளிக்கிறார்.

இந்த நிலையில் இன்றும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 7 மீனவர்கள், 2 நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.

இன்று அதிகாலை அவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், சண்முகவேல் என்ற மீனவரின் காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தார்.

திரும்பத் திரும்ப இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.

4 பதில்கள் -க்கு “இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்: நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு”

  1. Raameshwar சொன்னார்

    Dei ennada ithu news ellam inga potrukka !!

  2. ரத்தன் சொன்னார்

    ம்ம்ம்… இன்னும் இது மாதிரி நெறய விஷயம் வரும்…

  3. Natty சொன்னார்

    “அருகினில் வாழும் தமிழ்ப் பெண் நான் கேட்கிறேன்… கருவினைத் தரித்து. உருவினைக் கொடுத்து.
    மகனென அழைத்து. அருமையாய் வளர்த்து.
    “அரசினைக் காக்க உயிரதைக் கொடுப்பான்.
    இராணுவ வீரன், என் மகன் இவன்” எனப்
    பெருமையாயக கூறிடும் இராணுவ அன்னையே.
    அருகினில் வாழும் தமிழ்ப் பெண் நான் கேட்கிறேன் கூறிடு!

    பெண்ணினைப் பிடித்துத் துகிலினை உரித்துக்
    கைகளைக் கட்டி மார்பினை அறுத்து
    பலருடன் கூடிக் காமுகப் பசியினைத் தீர்த்து
    அவளது உயிரையும் எடுத்துப் புதைகிடங்கினில்
    போட்டவன் உன் மகன் என்றால் என்ன நீ சொல்வாய்?

    மார்பினில் ஊறும் பாலினைக் குடித்துத்
    தாய்க்குலம் பேணி வளர்த்ததால் மனிதனாய்
    தன்னுருப் பெற்றவன் உன் மகன் என்றால்
    இன்னொரு பெண்ணை இப்படிச் செய்து
    கொன்றிடும் உள்ளம் எங்கனம் கொண்டான்?எங்களின் நாட்டினில் எத்தனை வேலைகள்
    ஆக்கமாய்ச் செய்யலாம்? தமிழ் மண்ணினில்
    வந்து துவக்கினைக் காட்டி, அப்பனை,
    ஆச்சியை, அண்ணனைத் தம்பியைத்
    தங்கையைக் கொன்று அழிப்பதை விட்டால்
    எத்தனை வேலைகள் ஆக்கமாய்ச் செய்யலாம்?

    அன்னையே நானொன்று சொல்லுவேன் கேள்!
    எங்களின் மண்ணினில் சண்டைகள் நின்றிடும்,
    குண்டுகள் விழுவது சட்டென விட்டிடும்,
    சிங்கள மைந்தரால் ஆக்கிய இராணுவம்
    உங்களின் மண்ணினில் நடந்திடும் அப்போ,
    உன்னவள் மகள்தான் வீதியால் போவாள்,
    அவளினைக் காப்பது உன்னது பொறுப்பு,

    நாங்களும் நீங்களும் வேண்டுவதென்ன?
    மாந்தராய் மானமாய் வாழ்வதுதானே!
    அழகிய தீவினில் வாழும் சோதரி, தாயே!
    உனக்கிதைச் சொல்கிறேன். வேண்டிநான் கேட்கிறேன்.;
    பெண்களை மதிக்கும் மைந்தரைப் பெற்றிடு
    நேர்மையாய் நடக்கும் மனிதராய் வளர்த்திடு-அப்போ.
    ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தது போலே
    சுமுகமாய் இலங்கையில் வாழலாம் நாங்கள். செய்வாயோ?..”

    inaiyaqthil padithathu, ithayathil olithathu….

  4. ரத்தன் சொன்னார்

    அருமயா இருக்கு நட்டு அவர்களே…

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>