களஞ்சியம்

பார்த்தது… கேட்டது… படித்தது…

மொழி – என் பார்வை

பதிந்தவர் ரத்தன் மேல் ஏப்ரல் 8, 2007

ராதாமோகன் எடுக்கற அடுத்த படத்துல ஜோ வாய் பேச, காது கேக்க முடியாத கேரக்டர்ல நடிக்கறாங்கன்னு  சந்திரமுகி ரிலீஸாயி கொஞ்ச நாள் கழிச்சு நான் கேள்விப்பட்டேன். அப்பவே எனக்கு எதிர்பார்ப்பு அதிகமாயிடுச்சு. காரணம் அழகிய தீயே, பொன்னியன் செல்வன் ராதாமோகன் எடுத்திருந்த விதம் + என்னோட ஃபேவரைட் ஜோ :-) . அந்த எதிர்பார்ப்ப கொஞ்சம் கூட ஏமாத்தாம மொழியாக் குடுத்துருக்காரு ராதாமோகன். ரொம்ப ஆரோக்கியமான சினிமாவும் தமிழ்ல தொடர்ந்து ஜெயிக்கும்னு ப்ரகாஷ்ராஜ்/ராதாமோகன் வச்ச நம்பிக்கை வீண் போகல. ரெண்டு பேருக்குமே ஒரு சபாஷ். தொடர்ந்து ஜெயிக்க வாழ்த்துக்கள்.

mozhi.jpg

ஒரு காது கேக்க, பேச முடியாத ஹீரோயினுக்கும், இசைக் கலைஞனா இருக்கிற ஹீரோவுக்கு நடக்கற காதல் கதைதான் படம். இதக்கேட்ட உடனே படம் ஒரே ரொமான்டிக்கா, பொயட்டிக்கா இருக்குமோன்னு தான் நம்மல்ல பலர் நினப்போம். ஆனா இந்த படத்த ரொம்ப எளிமயா, கலகலப்பாவும் குடுக்க முடியும்னு சாதிச்சு காட்டிருக்காறு ராதாமோகன்.

  • படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துல தியேட்டரே கலகலன்னு கல்யாண வீடு மாதிரி ஆயிடுது. நடுவுல கொஞ்சம் இலுக்கற மாதிரி இருந்தாலும் ரசிக்கும்படியாவே இருக்கு. படத்துல பெரும்பாலான காட்சிகள்ல (70%) காமெடி தான். எல்லா காமெடியும் ரொம்ப இயல்பா கதையோட வந்து போறது படத்தோட பெரிய ப்ள்ஸ்.
  • ப்ரித்திவிராஜ் நல்ல தேர்வு. ரொம்பவே நல்லா நடிச்சிருக்காரு. எனக்கு காமெடியும் வரும்னு ப்ரகாஷ்ராஜ் ஒரு கை பாத்திருக்காரு. படத்துல நெறய கைத்தட்டல் வாங்குறது இவருதான். பெருசா காமெடிக்கின்னு எந்த கேரக்டர்ஸும் இல்ல. போடனுமேன்னு தெலுங்கு புகழ் பிரம்மானந்தத்த போட்டுருக்காங்க. மனுஷன பாத்தாலே நம்க்கு சிரிப்பு பிலிருக்கிட்டு வருது. புகுந்து விளையாடிருக்காரு. இந்த படத்துல ஜோவ பாத்தீங்கன்னா ஒரு காலத்துல ஓவர் ஆக்டிங் பண்ணின அந்த ஜோவா இதுன்னு தோனும். எங்கிட்ட ஜோவ பத்தி கிண்டல் பண்ணின நெறய பேர் நெஜமாவே சூப்பரா நடிச்சிருக்காடான்னு சொன்னாங்க. ஸ்வர்ணமால்யாவுக்கு அலைபாயுதேவுக்கு அப்பறம் நல்ல ரோல். நல்லா நடிச்சிருக்காங்க. இவங்க எல்லாரயும் விட நான் ரொம்ப ரசிச்ச கேரக்டர் ப்ரபெஸரா வர்ற எம்.எஸ்.பாஸ்கர். 1984ல நடக்கற விஷயத்த பத்தி சொல்லி சொல்லி சிரிக்க வச்சாலும் ஒன்னு ரெண்டு சீன்ல கண்கலங்க வச்சிர்றாரு. கலக்கிட்டீங்க பட்டாபி!
  • படத்தோட இன்னொரு பெரிய ப்ள்ஸ் விஜியோட வசனங்கள். ரொம்ப யதார்த்தமான சிரிக்க வக்கக்கூடிய அதே நேரத்துல அட போட வைக்ககூடிய வசனங்கள். அழகிய தீயே, பொன்னியின் செல்வன் க்கும் கூட இவர் தான் வசனகர்த்தாவாம். தமிழ் சினிமாவுக்கு இரட்டை அர்த்தம் இல்லாத, நல்ல வசனமும் எழுத முடியும்னு மூணாவது படத்துலயும் நிரூபிச்சிருக்காரு. நான் ரொம்ப ரசிச்ச வசனங்கள் சில இதோ
    • நீ பேச்சரல்னா வீடுதான் குடுக்க மாட்டேங்கறான்… நான் பேச்சரல்னா பொண்ணே குடுக்க மாட்டேங்கறான்டா.
    • அவன் அவன் கல்யாணத்த ஆகாயத்துல வக்கறான், பூமிக்கு அடில வக்கறான், நான் சர்ச்சுல தானேன்னு ஒ.கே சொல்லிட்டேன்.
    • ஸ்வர்: நீங்க சி.பி.ஐ ன்னு நான் எப்படி நம்பறது. பிரகா: நல்ல கேள்வி. நான் நடந்து போரேன். நீங்க சி.பி.ஐ ன்னு கூப்பிடுங்க நான் திரும்பிப் பாப்பேன்.
  • இசையப்பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகனும். தமிழ் சினிமால எவ்வளவு ஆர்ப்பாட்டமா குத்துப்பாட்டுக்கள் வந்தாலும் தன்னோட பானில எல்லா படத்திலயும் ஒரு மெலடி பாட்டு குடுக்கற வித்யாசாகர் இந்த படத்துல எல்லா பாட்டையுமே மெலடியா குடுத்திருக்காரு. இன்னொரு ஸ்பெஷல், எல்லாமே சோலோ பாடல்கள். அதுவும் வேறவேற சிங்கர்ஸ். பிரம்மானந்தம் பிரகாஷ்ராஜை முழுசா பாக்கற அந்த சீன்ல ஒலிக்கற அந்த ரிதம்மிக் பிண்ணனி இசை நம்ம சிரிப்ப இன்னும் அதிகமாக்குது. பிண்ணனி இசை முடிஞ்சு எல்லாரும் கைத்தட்டற மாதிரி வர்ற அந்த இடத்துல பிரம்மானந்ததோட அந்த எக்ஸ்பிரஷன் அய்யய்யோ! மரண காமெடிங்கோ!
  • பாடல் வரிகள் பாட்டுக்கு பெரிய முதுகெலும்பு. ஒவ்வொரு பாட்டும் அவ்வளவு அர்த்தமுள்ளதா அழகா எழுதிருக்காரு நம்ம கவிப்பேரரசு. காற்றின் மொழி… பாட்ட கேட்டா வைரமுத்துவால மட்டும்தாய்யா இப்படில்லாம் எழுதமுடியும்னு சொல்லுவீங்க. ராதாமோகன் முழு சுகந்திரம் குடுத்திட்டாறாம்.
  • ப்ரித்திவிக்கும், பிரகாஷ்ராஜுக்கும் லவ் ஆரம்பிக்கும் போது தலைக்கு மேல ப்ல்பு எரியறது மணி அடிக்கறது எல்லாம் நமக்கு சிரிப்ப வரவச்சாலும், கிளைமாக்ஸ்ல ப்ரித்திவியும் ஜோவும் சர்ச்சுக்கு வெளில ஒண்ணு சேர்ற அந்த காட்சில சர்ச்ச அலங்கரிக்க போட்டிருந்த மொத்த சீரியல் செட் லைட் எரிஞ்சு, சர்சோட ஆலயமணி அடிக்கும் போது நம்மலயே அறியாம புல்லரிச்சி போயி சூப்பர்ல் ன்னு சொல்ல வக்குது.

தியேட்டர விட்டு வெளில வர்ற எல்லாரும் இந்த மாதிரி ஒரு தமிழ் சினிமா குடும்பத்தோட பாத்து எவ்வளவு நாள் ஆச்சு ன்னு பெருமூச்சு விடறாங்க. மொழி ஆடியோ வெளியீட்டு விழாவுல பிரகாஷ்ராஜ் சொன்னது.

நம்ம சில நேரங்கள்ல செய்ற சில விஷயத்தினால நம்மலோட மனசு ரொம்ப சந்தோஷமா, நிறைவா இருக்கும். அது எனக்கு இந்த படம் எடுத்ததுக்கு அப்பறம் கிடைச்சிருக்கு.

பிரகாஷ்ராஜ் சார் எங்களுக்கு இந்த படம் பாத்ததுக்கு அப்பறம் அந்த மாதிரி இருக்கு சார் னு சொல்லத்தோனுது.

                                                                                                                                                                    -     ர த் த ன்

8 பதில்கள் -க்கு “மொழி – என் பார்வை”

  1. Praba சொன்னார்

    ப்ரித்திவிக்கும், பிரகாஷ்ராஜுக்கும் லவ் ஆரம்பிக்கும் போது தலைக்கு மேல “ப்ல்பு” எரியறது “மணி” அடிக்கறது எல்லாம் நமக்கு சிரிப்ப வரவச்சாலும், கிளைமாக்ஸ்ல ப்ரித்திவியும் ஜோவும் சர்ச்சுக்கு வெளில ஒண்ணு சேர்ற அந்த காட்சில சர்ச்ச அலங்கரிக்க போட்டிருந்த மொத்த சீரியல் செட் லைட் எரியும் போதும், சர்சோட ஆலயமணி அடிக்கறதயும் பார்க்கும் போதும் நம்மலயே அரியாம புல்லரிச்சி போயி “சூப்பர்ல்” ன்னு சொல்ல வக்குது.

    ahaaa i didnt notice this scene..

    why didnt u mention the scene when Praks propose to swar.. onnum ille chumma bore adichutu.. apdiye ennai kalyanam pannikireeengalaa nu kettutu polaam nu vandhen

  2. ரத்தன் சொன்னார்

    /* ahaaa i didnt notice this scene.. */

    - அதுக்கெல்லாம் ஒரு கலா ரசனை வேணும்மா… ;-)

    /*why didnt u mention the scene when Praks propose to swar.. onnum ille chumma bore adichutu.. apdiye ennai kalyanam pannikireeengalaa nu kettutu polaam nu vandhen*/

    - ஜ்ஸ்ட் லைக் தட்… நோ அஃபன்ஸ் :-)

  3. Appaavi சொன்னார்

    mika arumaiyaan vimarsanam :-)

  4. ரத்தன் சொன்னார்

    வருகைக்கு நன்றி அப்பாவி. தொடர்ந்து படிங்க.

  5. Kovai Mani சொன்னார்

    நான் இன்னும் இந்தப் படம் பார்க்கலை.
    உங்க விரிவான விமர்சனம் படிச்சுட்டு படம் பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

  6. ரத்தன் சொன்னார்

    அட, வாங்க மணி. நம்பி பாருங்க :-)
    பாத்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.

  7. விக்னேஷ் பாபு சொன்னார்

    உன் பார்வையா………………………………………………………………………ஜோ மேல மட்டும் தானடா இருந்துர்கும்………………

  8. VENNILA சொன்னார்

    Iyarkayin Mozhigal Purinthuvidil Manitharin Mozhigal thevai illai .Ithyathin Mozhigal purinthuvidil Manitharku Mozhiyae thevai illai

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>