இன்னும்மாய்யா நீங்க திருந்தல?
பதிந்தவர் ரத்தன் மேல் ஏப்ரல் 9, 2007
மும்பை, ஏப் 9: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் கேவலமாக விளையாடி நாடு திரும்பியுள்ள இந்திய அணியை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை வாரியம் அறிவித்துள்ளது.அதில் முக்கியமானது, விளம்பரப் படங்களில் நடிக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள். இதோ அவை
- ஒரு வீரர் ஒரு போட்டித் தொடருக்கு 3 நிறுவனங்களுக்கு மட்டும் நடிக்கலாம்.
- போட்டிக்கு 15 நாட்களுக்கு முன்பே விளம்பரப் படங்களில் நடித்து முடித்து விட வேண்டும்.
- மேலும் விளம்பரப் படங்களில் நடிப்பதற்கும், விளம்பரங்களில் ஒப்பந்தமாவதற்கும் கிரிக்கெட் வாரியத்தின் முன் அனுமதியையும் வீரர்கள் பெற வேண்டும்.
இதனால் சகட்டு மேனிக்கு விளம்பரப் படங்களில் நடித்து வரும் மூத்த வீரர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சச்சின் டெண்டுல்கருக்கு கிட்டத்தட்ட ஆண்டுக்கு ரூ. 15 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இதனால் டிராவிட், சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கேப்டன் டிராவிட், வாரிய நிர்வாகத்திடம் பேசத் திட்டமிட்டுள்ளார்.
ஆனால் வீரர்கள் விளம்பரக் கட்டுப்பாடு குறித்து கவலைப்படுவதை விட்டு விட்டு விளையாட்டில்தான் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என கிரிக்கெட் வாரிய பொதுச் செயலாளர் நிரஞ்சன் ஷா காட்டமாக கூறியுள்ளார்.
இம்புட்டு அசிங்கப்பட்டதுக்கு அப்பறமுமாய்யா நீங்க திருந்தல.

Priya சொன்னார்
என்ன சொல்லி என்ன ஆக போகுது
கடைசியில Players சொல்ற மாதிரி தான்
நடக்க போகுது
ரத்தன் சொன்னார்
அதென்னமோ உண்மைதான் ப்ரியா
விக்னேஷ் பாபு சொன்னார்
1979ல் இந்தியா முதல் சுற்றில் வெளியேறியது.ஆனால் 1983ல இந்தியா உலககோப்பை வென்றது.அதுபோல் இம்முறையும் முதல் சுற்றில் வெளியேறியது.எனவே அடுத்த உலககோப்பை கண்டிப்பாக நமக்குதான்………………….
நாங்க எல்லாம் திருந்துவோம்னு நினைச்சிங்களா…….
அது நடக்காதடி……………