களஞ்சியம்

பார்த்தது… கேட்டது… படித்தது…

புஷ்ஷுக்கு எதிரான கோஷம்

பதிந்தவர் ரத்தன் மேல் ஏப்ரல் 13, 2007

டவுண்டவுன் ல ஆபீஸ் இருந்தா ரொம்ப இம்சைங்க. ஆத்திர அவசரதுக்கு கார எடுத்துக்கிட்டு வெளில போக முடியாது. எங்க பாத்தாலும் ஒரே ட்ராபிக்கா இருக்கும். எந்த ரோடு ஒன் வே எது டு வே ன்னே தெரியாது. அதவிட பெரிய கொடும பார்க்கிங் லாட்டே கிடைக்காது. அப்படியே கிடச்சாலும் அந்த கூட்டத்துல பேரளல் பார்க்கிங் பண்ணனும். அதுவும் பார்க்கிங் மீட்டர்ல வெரும் க்வாட்டர் டால்ர் காயின் தான் போட முடியும். இவ்வளவும் தெரிஞ்சிருந்தும் இன்னக்கி பெரிய இவம்மாதிரி “அம்மா, இன்னக்கி நான் வெளில சாப்பிட்டுக்கறேன்” னு சொல்லிட்டு வந்துட்டேன்.  மனசுக்குள்ள அப்பப்ப “மவனே உனக்கு இருக்குடி. அம்மா இந்தியா போனதுக்கு அப்பறம் தினமும் சமச்சே சாவப்போறே”ன்னு தோனும்.

7ஆவது மாடில பார்க் பண்ணிருக்கற என்னோட கார எடுத்திகிட்டு குஸிணோஸ் சப்ஸ் போலாம்னு கிளம்பினேன். வழக்கம் போல பாதைய மறந்துட்டேன். ஒரு வழியா கண்டுபிடிச்சி கடைக்கு பக்கத்துல போனா எதிர்பாத்த மாதிரியே பார்க்கிங் கிடைக்கல. ஒரு அஞ்சி நிமிஷம் ரவுண்டு அடிச்சதுக்கு அப்பறம் ஒரு லாட் கிடச்சது. இப்ப அடுத்த பிரச்சன “பேரளல் பார்க்கிங்” பண்ணனும். ம்ம்ம்… லைசன்ஸ் வாங்கினப்ப போட்டு காமிச்சது.  ஒரு வழியா தட்டு தடுமாறி வண்டிய பார்க் பண்ணிட்டு போய் திருப்தியா சாப்பிட்டேன். 

ஆஸ்டின் நகரம் டெக்ஸாசோட தலைநகரம்ங்கிறதால ஸ்டேட் கேப்பிட்டல் பில்டிங் இங்கதான் இருக்கு.  டவுண்டவுன் மத்தியில  பிரம்மாண்டமா, கம்பிரமா, அழகா பரந்து விரிஞ்சு இருக்கு. அதுக்கு பக்கத்துல தான் இந்த கடை. சாப்பிட்டு முடிச்சு கார எடுத்திட்டு கிளம்புனதும் ஒரு சிக்னல். ஸ்டேட் காப்பிட்டல் பில்டிங்குக்கு நேர் எதிர்ல சிக்னலுக்கு முன்னாடி கார்ல உக்காந்திட்டு இருந்தேன். அப்ப பக்கத்துல ஒரு பெரியவரு ஒரு பெரிய போர்ட்ல ஏதோ எழுதி வச்சி நின்னுகிட்டுருந்தது கண்ணுல பட்டுச்சு. அதுல எழுந்திருந்த முதல் வார்த்தைய படிச்சவுடனே ஆரம்பிச்சிட்டீங்களாடா ன்னு நெனச்சேன். முழுசா படிச்சுப்பாத்ததும் ரொம்ப ஆச்சர்யப்பட்டேன். அதுல அதிபர் புஷ் பத்தி தகாத வார்த்தைகள்ல எழுதிருந்தது. மொபைல் கேமராவில இத ஒரு போட்டோ எடுத்தா என்னன்னு நினைக்கும் போது இது வரையும்  சிகப்புல இருந்த சிக்னல்,   பளீர் னு பச்சைக்கு மாறிடுச்சி. வண்டிய ஒட்டிக்கிட்டே வர்ற வரையும் வரட்டும்! ஒரு ட்ரை குடுக்கலாம்னு க்ளிக் பண்ணினேன். பாத்தா போட்டோ நான் எதிர்பார்த்தத விட நல்லாவே வந்திருந்தது.  இதோ அந்த போட்டோ கிழே உங்களுக்காக.

calvingraphics.jpg
13042007.jpg

போட்டோ பெருசா தெரியணும்னா இந்த குட்டி போட்டோவ க்ளிக் பண்ணுங்க.

ஆபீஸ் போய் சேர்ந்ததுக்கு அப்பரம் கொஞ்ச நேரம் கழிச்சு என் மனசுக்குள்ள இந்த மாதிரி நம்ம ஊர் சிக்னல்ல எவனாவது ஆளுங்கட்சிக்கு எதிரா எதாவது எழுதி நின்னுகிட்டு இருந்தா என்ன ஆகும் னு நெனச்சேன். லேசா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு என்னோட அபீஸ் வேலய பாக்க ஆரம்பிச்சுட்டேன்.

3 பதில்கள் -க்கு “புஷ்ஷுக்கு எதிரான கோஷம்”

  1. Vikram சொன்னார்

    உண்மை தான்! ஆனால் நீங்கள் வாழும் அமரிக்காவிலும் கூட மாற்றுக் கருத்துக்காரர்கள் தாக்கப்படும் சம்பவங்களும், காணாமல்போதல்களும், அவர்களின் மர்மக் கொலைகளும் நடந்து கொண்டிருப்பதனை ஊடகச் செய்திகள் தினமும் கூறிக்கொண்டிருக்கின்றனவே.
    http://www.oruthakaval.com

  2. ரத்தன் சொன்னார்

    விக்ரம், தங்கள் வருகைக்கு நன்றி! இங்கு நிகழும் சிலவற்றை நேரில் பார்க்கும்போது இது போல் நமது ஊரில் நடந்தால் எப்படி இருக்கும் என்று நினனப்பது என் வழக்கம். அப்படி நினைத்ததே இதுவும். மற்றபடி நீங்கள் சொல்வதை 100% ஒத்து கொள்கிறேன். ஒருத்தகவல்.காம் மிக அருமை. நான் வெகு நாட்களாக தேடிக்கொண்டிருந்த பொன்னியின் செல்வனை இந்த தளத்தில் கண்டது மிக்க மகிழ்ச்சி.

  3. ராமேஷ்வர் சொன்னார்

    ரத்தன், இந்த சைட் பாரு
    http://www.tamilnation.org/hundredtamils/
    கல்கியோட புக்ஸ்க்கு
    http://www.tamilnation.org/hundredtamils/kalki.htm

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>