வீட்டுக்குள்ள சுனாமி!
பதிந்தவர் ரத்தன் மேல் ஏப்ரல் 19, 2007
சில நேரங்கள்ல சினிமாவுல வர்ற காமெடியெல்லாம் தூக்கி சாப்பிடுற அளவுக்கு மெகா காமெடி விஷயங்கள் நம்ம வாழ்க்கைல நடக்கறதுண்டு. அந்த மாதிரி விஷயங்கள எப்ப நெனச்சா பாத்தாலும் நம்மல அறியாம நமக்கு சிரிப்பு பொத்துக்கிட்டு வந்திடும். அந்த மாதிரி என் வாழ்க்கைல நடந்த ஒரு குபீர் காமெடி சம்பவம்தான் இது.
சென்னைல வேல பாத்துகிட்டு இருந்த காலம் அது (2005). என்கூட படிச்ச ப்ரதீப் (பிட்டு), ராஜேஷ், சபரினாத்(மாமா) எல்லாரும் ட்ரஸ்ட்புரத்துல ஒரு சிங்கிள் பெட்ரூம் வீட்ல வாடகைக்கு தங்கிருந்தோம். ஏற்கனவே தங்கிருந்த சூளைமேடு வீட்ல தண்ணி பிரச்சனை தல விரிச்சி ஆடினதால கிட்டதட்ட மூணு நாலு மாசமா வீடு தேடி கடைசியா இந்த வீட்ட புடிச்சோம். புதுசா கட்டுன வீடு அது. மாடில வீட்டு காரவங்க இருந்தாங்க. கீழ இருக்கிற இரண்டு வீட்ல நாங்க ஒரு வீட்ல இருந்தோம். சின்ன வீடா இருந்தாலும் புதுசா கட்டினதுங்கரதுனால ஓ.கே. பண்ணிட்டோம். வீட்டுக்கு போய் கொஞ்ச நாள்ல டி.வி, வாஷிங்மெஷின் லாம் வாங்கி பட்டய கிளப்பிட்டுருந்தோம்.
மாசத்துல இரண்டு தடவையாவது வீட்ட சுத்தம் பண்ணலேன்னா என்னால இருக்கவே முடியாது. வீட்ட சுத்தம் பண்ணனும்னு சொன்னாலே பசங்க ஏன்டா இப்படி சாவடிக்கற ன்னுவானுங்க. அந்த வாரம் எவ்வளவோ சொல்லியும் ராஜேஷ் அதெல்லாம் அடுத்த வாரம் பண்ணிக்கலாம் ன்னு சொல்லிட்டான். சரின்னு நானும் விட்டுட்டேன். வீக்கென்ட்கிறதால சபரிநாத் மதுரைக்கு போயிருந்தான். நான், ராஜேஷ், பிரதீப் மூணு பேர் தான் இருந்தோம். சன்டே நைட் திடீர்னு படத்துக்கு போலாம்னு முடிவு பண்ணோம். அப்ப எங்களோட ஃபேவரைட் சத்தியம் தியேட்டர் தான். என்ன படம்னு எனக்கு சரியா நியாபகத்துல இல்ல. ஏதோ இங்கிலீஷ் படம்ன்னு மட்டும் நியாபகம் இருக்கு.
படம் முடிச்சிட்டு வீட்டுக்கு வர நைட் 12:00 மணி கிட்ட ஆயிடுச்சு. வீட்டுக்கு வந்தவுடனே ராஜேஷ் பாத்ரூம் போய் கொழாயத் தொறந்தான். க்ரீச்.. க்ரீச் ன்னு சவுண்டோட தண்ணி லேசா வந்துகிட்டு இருந்தது. கொஞ்ச நேரங்கழிச்சு புஸ்ஸுன்னு காத்துதான் வந்தது, அதுவும் கொஞ்ச நேரத்துல நின்னு போச்சு. இந்த நேரத்துல மோட்டர் போட்டா வீட்டுக்காரவங்க எந்திரிச்சுருவாங்கன்னு அப்படியே விட்டுட்டோம். வழக்கமா முன்ரூம்ல நானும், ராஜேஷும் தூங்குவோம். முதுகுவலிப் பிரச்சனைங்கிறதால உள்ரூம்ல பெட்லதான் ப்ரதீப் தூங்குவான். அன்னிக்கும் அப்படிதான் தூங்குனோம். நானும், ராஜேஷும் கொஞ்ச நேரம் டி.வி பாத்துட்டு தூங்கிட்டோம்.
காலைல மணி ஆறு ஆறரை இருக்கும். ராஜேஷ் என்ன ஆக்ரோஷ்மா எழுப்ப முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தான். பதரி அடிச்சிட்டு எந்திருச்சிப் பாத்தா முன்ரூம் முழுக்க தண்ணி. பேப்பர் கப்பல் செஞ்சி விடலாம், அந்த அளவுக்கு தண்ணி. படுத்துருந்த பாய், பொத்திருந்த பெட்ஷீட், போட்டிருந்த துணி உட்பட நானும் ஃபுல்லா நெனஞ்சிருந்தேன். இது எல்லாம் நடக்கற வரையும் வாயப் பொலந்து தூங்கிக்கிட்டு இருந்திருக்கேன். எங்க அம்மா எங்கிட்ட வீட்டுக்குள்ள வெள்ளமே வந்தாலும் உன்ன தூக்கத்துல இருந்து எழுப்ப முடியாதுடா ன்னு அடிக்கடி சொல்லுவாங்க. அது உண்மதான்னு அன்னிக்குதான் புரிஞ்சுது!
என்னாடா ஆச்சு ன்னு தூக்க கலக்கத்துலயே ராஜேஷக் கேட்டேன்.
ம்ம்ம்… வீட்டுக்குள்ள சுனாமி வந்திருச்சு… ன்னு நக்கலா பதில் சொன்னான்.
அங்கிட்டும், இங்கிட்டும் திரும்பி பாத்தேன். பாத்ரூம் பக்கெட்ல இருந்து தண்ணி நிரம்பி வழியிரத பாத்ததுக்கு அப்பறம் தான் புரிஞ்சது என்ன நடந்திருக்கும்னு.
அய்யய்யோ… யார்ரா மோட்டர போட்டது ன்னு கேட்டேன்.
எனக்கென்னாடா தெரியும்… விடிஞ்சிருச்சுல்ல எவனாவது போட்டுருப்பாய்ங்க ன்னான் ராஜேஷ்.
நல்ல வேல என் லாப்டாப்ப ஒரு அட்டபெட்டிக்கு மேல வச்சிருந்த்துனால தப்பிச்சது. இல்லாட்டி சங்குதான். எங்களோட பெட்டி எல்லாமே உள்ரூம்ல இருக்கிற கட்டிலுக்கு கீழதான் இருக்கும். உள்ரூம்ல தண்ணி அவ்வளவா போகல. இருந்தாலும் பெட்டி உள்ள இருக்குங்கிறதால தண்ணி போக விடாம கையால தள்ளுகிட்டு இருந்தோம். கட்டில்ல படுத்திருந்ததால ப்ரதீப் சேஃபு. அவனயும் எழுப்பி விட்டோம்.
எந்திருச்சு பாத்த அவன் என்னாடா இது! ன்னான்.
நைட்டு கொழாய மூடாம படுத்துட்டியாடா ன்னு ராஜேஷ பாத்து கேட்டான். அவனுக்கு ஒரு வெளக்கம் சொல்லிட்டு தண்ணில நெனஞ்சது, நெனயாததுன்னு ஒவ்வொன்னா எடுத்தி வச்சிகிட்டு இருந்தோம்.
எப்படா பாத்த ன்னு ராஜேஷ கேட்டேன்.
அதுக்கு ரரஜேஷ் தூங்கிட்டு இருக்கும் போது திடீர்னு கைல ஏதோ தண்ணி பட்ட மாதிரி இருந்துச்சு… சரி தொடக்கலாமேன்னு லுங்கில கைய வச்சா லுங்கி ஃபுல்லா நெனஞ்சு போயிருந்தது. எந்திருச்சு பாத்தா… வீடு ஃபுல்லா தண்ணி! ன்னான். அரக்கபரக்க வேல பாத்துகிட்டு இருந்த நானும் ப்ரதீப்பும் அத கேட்ட உடனே சிரிச்சிட்டோம். அவன் பதில் சொன்ன தோரணைய நெனச்சா இன்னக்கும் விழுந்து விழிந்து சிரிச்சுக்கிட்டு இருப்பேன்.
அப்பறம் ராஜேஷ் தண்ணிய ஃபுல்லா வெளக்கமாத்தால கூட்டி தள்ளிகிட்டு இருந்தான். அத பாத்து நான் ஒழுங்கா நான் சொன்னப்பவே வீட்ட க்ளீன் பண்ணிருக்கலாம்ல… இப்ப பாரு கடவுளா பாத்து தண்ணி ஊத்தி க்ளீன் பண்ண வச்சிட்டாரு ன்னு சொல்லி கலாய்ச்சிகிட்டு இருந்தேன்.
எல்லா என் நேரன்டா… ன்னு சலிச்சுக்கிட்டான் ராஜேஷ்.
| வீடு ஃபுல்லா க்ளீன் பண்ணிட்டு வீட்டுக்கு வெளில தண்ணிய தள்ளி விடும்போது வீட்டுக்காரம்மா பாத்துட்டாங்க. என்னப்பா இவ்வளவு தண்ணின்னு அந்தம்மா கேக்க போகுதுன்னு நெனச்சிக்கிட்டு இருந்தா… பரவாயில்லியே… வீட்ட தண்ணி ஊத்தி கழுவி விடரீங்களே! நல்ல பொருப்பான பில்லங்கதான் னு சொல்லிட்டு போயிட்டாங்க. ராஜேஷ் என்னயும், ப்ரதீப்பயும் திரும்பி ஒரு பார்வ பாத்தான். எங்களுக்கு தாங்க முடியாத சிரிப்பு. வீட்டுக்குள்ள வந்து விழுந்து விழுந்து சிரிச்சிகிட்டு இருந்தோம். எல்லாத்தயும் ஒழுங்கு பண்ணி முடிக்க கிட்டத்தட்ட காலைல பத்து மணி ஆயிடுச்சு. ஆபீஸ் போய் என்னோட ஃபிரண்ட்ஸ் கிட்ட இத சொல்லி சொல்லி சிரிச்சிக்கிட்டுருந்தேன்.
நான் அமெரிக்கா வந்ததுக்க அப்பரமும் மத்த மூணு பேரும் இன்னும் அதே ரூம்லதான் இருக்காங்க. ராஜேஷ் அப்பப்ப ரூம க்ளீன் பண்றானோ இல்லியோ டெய்லி தூங்கறதுக்கு முன்னாடி கண்டிப்பா கொழாய் மூடிருக்கான்னு பாத்துட்டுதான் தூங்குவான்னு நெனக்கறேன் |
![]() |


முஹம்மது சொன்னார்
மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள். மதுரை மண்ணுக்கே உரித்தான வாசனையோடு அழகான நகைச்சுவை. எப்படி தமிழில் எழுதுவது என்று தேடிக் கொண்டிருந்த என்னை தமிழில் எழுத வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்!!!
G3 சொன்னார்
Sema ROTFL post
) andha sidela irukkara kutti photovum cute
)
//வீட்டுக்குள்ள வெள்ளமே வந்தாலும் உன்ன தூக்கத்துல இருந்து எழுப்ப முடியாதுடா ன்னு அடிக்கடி சொல்லுவாங்க. அது உண்மதான்னு அன்னிக்குதான் புரிஞ்சுது!//
)
ungamma kitta sonneengala nijaamavae ippadi thannila thoonginadha
ரத்தன் சொன்னார்
முகம்மது, தங்கள் வருகைக்கு, பின்னோட்டத்துக்கும் மிக்க நன்றி! கண்டிப்பாக தொடர்ந்து எழுதுவேன். நீங்களும் தொடர்ந்து படிங்க
Raameshwar சொன்னார்
வெளியே மட்டும் தண்ணியா…இல்ல உள்ளேயுமா ?
ரத்தன் சொன்னார்
ஜி3,
. இன்னும் அவங்களுக்கு இத பத்தி தெரியாது.
அட நீங்க வேற, இத மட்டும் எங்க அம்மாகிட்ட சொன்னா… “எனக்கு தெரியும்டா உன்னப்பத்தி…” னு பாட்டு பாட ஆரம்பிச்சுடுவாங்க…
ரத்தன் சொன்னார்
/*வெளியே மட்டும் தண்ணியா…இல்ல உள்ளேயுமா ?*/
டேய் ராமேஷு நீ என்ன கேக்க வர்றேன்னு தெரியுதுடா…
உள்ளயும் தான்
Praba சொன்னார்
ha ha superb one.
ini sogamaa iruntha kandipaa idha padikiren.. siripu adakka mudiyaathu
ராமேஷ்வர் சொன்னார்
டேய் டர்டி பெல்லொ நான் அத கேக்கலடா…தண்ணி அடிச்சிருந்தியானு கேட்டேன்.
ரத்தன் சொன்னார்
டேய் நாதாரி தெளிவா கேக்கறது இல்ல… ராஸ்கல்… நான் என்னிக்கிடா தண்ணி அடிச்சிருக்கேன்.
VENNILA சொன்னார்
hahaha