களஞ்சியம்

பார்த்தது… கேட்டது… படித்தது…

‘கவிதைகள்’ பகுப்புக்கான தொகுப்பு

நான் எழுதினது இல்லீங்கோ…

பத்தாம் வகுப்பு…

பதிந்தவர் ரத்தன் மேல் ஏப்ரல் 4, 2007

நேத்து என்னோட ஃபிரண்ட் ஒருத்த்ன் எனக்கு போன் பண்ணிருந்தப்ப இந்த வலைப்பதிவப் பத்தி விமர்சனம் கேட்டேன். அதுக்கு அவன் “ம்ம்ம்… எழுதுறதுதான் எழுதுற நல்ல தமிழ்ல எழுத வேண்டியது தானே” னு சொன்னான். நான் அதுக்கு “விட்றா என்னோட சந்தோஷத்துக்காக என்னோட பானில எழுதறேன்”"னு சொன்னேன். இருந்தாலும் என்னோட பதிவுகள்ல சில நல்ல தமிழ்ல எழுதறதா முடிவு பண்ணிருக்கேன். அதோட ஒரு சிரு முயற்சி இதோ கீழ.

அது என் பத்தாம் வகுப்பு பருவம்…

காலையில் ஒரு கணக்கு வகுப்பறை…

எனது கணக்கு ஆசிரியர் கண்டிப்புக்கு பெயர் போனவர்… 

தினமும் விதவித ”நீள” பிரம்புகளை கொண்டு வந்து எங்களை பயத்துக்குள்ளாக்குவார்…

ஒவ்வொரு நாளும் “இன்று என்ன பிரம்போ…” என்று ஒரு பெரிய விவாதமே எங்களுக்குள் நடக்கும்… 

அவர் வகுப்பறைக்கு வருவதற்கு முன் வந்துவிடும் அவரது பிரம்பு….

அன்றும் வழக்கம்போல் அவருக்கு முன் வந்திறங்கியது பிரம்பு…

அவரும் சிறிது நேரம் கழித்து வந்து பாடத்தை ஆரம்பித்தார்…

எப்பொழுதும் அவரது வகுப்பு நேரங்களில் வகுப்பே மயான அமைதியாய் திகழும்…

அன்று வழக்கத்துக்கு மாறாக மாணவர்களுக்குள் சிறு சலசலப்பு…

அனைவருமே கவனித்திருந்தார்கள் அதை…

ஆனால் சொன்னால் என்ன ஆகுமோ என்று பதைபதைப்பு அனைவருக்கும்…

ஆசிரியரும் அவ்வப்போது “ம்ச்”… “ம்ச்”… என்று சொல்லி சலசலப்பை குறைக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்…

ஆனாலும் அந்த முயற்சி அவர் கரும்பலகை பக்கம் திரும்பும் வரையே கைகொடுத்தது… 

திடீரென ஒலித்தது ஒரு கனீர் குரல்… அது வகுப்பின் முதல் மாணவனான  சண்முகராஜனின் குரல்…

“எக்ஸ்கியூஸ்மி சார்…” என்றான். கரும்பலகையில் எழுதிக்கொண்டிருந்த ஆசிரியர் திரும்பி “எஸ்” என்றார்.

“சார்… உங்க பேண்ட் ஸிப்…” என்றான் தழுந்த குரலில்… அப்பொழுதுதான் அவருக்கு தெரிந்தது வகுப்பின் சலசலப்புக்குக் காரணம்…

ஆசிரியர் கரும்பலகை பக்கம் திரும்பினார்…

இம்முறை அவர் திரும்பியது எழுதுவதற்காக அல்ல… அவர் உடையை சரி செய்து கொள்வதற்காக…

ஆங்காங்கே மெல்லிய சிரிப்பலைகள் ஒலித்தன…

வகுப்பு முடிந்து ஆசிரியர் வெளியேறியதும்…  ஒலித்தன காதை கிழிக்கும் வெடிச்சிரிப்புகள்…

                      -  ர த் த ன்

.... இங்கே பதியப்பட்டது என் நினைவுகள், கவிதைகள், தமாசு... தமாசு... | 4 மறுமொழிகள் »

ஆறாத ஆகஸ்ட் 6

பதிந்தவர் ரத்தன் மேல் ஏப்ரல் 1, 2007

சமீபத்தில நான் ஆ.வி ல படிச்ச கவிப்பேரரசு வைரமுத்துவோட கவிதை… ஹிரோஷிமா குண்டு வெடிப்ப பத்தி…

1945 ஆகஸ்ட் 6, அதிகாலை 8:15 மணி

ஹிரோஷிமாவின் தலைக்கு மேலே பறந்த எமதர்மப் பறவை பூமியில் இட்டது தன் அக்கினி முட்டையை.

சாவின் வெறிநாய் வானத்திலிருந்து அவிழ்த்துவிடப்படுகிறது வாழ்வை நோக்கி.

மூன்று மீட்டர் நீளம், முக்கால் மீட்டர் விட்டம், நாலு டன் எடைகொண்ட அணுகுண்டு அறுந்து விழுகிறது அந்தரத்தில்.

வானத்தைச் செவிப்படுத்தும் பேராசையோடு வெடித்துச் சிதறுகிறது விண்ணில்.

38.5 – 40 டிகிரி செல்சியஸ் வெப்பம்தான் ஒரு மனிதத் தோல் தாங்கும்.

100 டிகிரியில் கொதிக்கும் வெந்நீரி கொட்டிவிட்டாலே தோல் கருகி உதிர்ந்துவிடும்.

அது 6000 டிகிரி செல்சியஸ் வெப்பம். நினைத்தாலே எரிகிறது நெஞ்சு.

கூரைகள் இடிந்து தலையில், வீடுகள் வெடித்துச் சாலையில், எரியும் மரங்கள், பறக்கும் பலகைகள், உருகி ஓடும் வீதி, தீப்பிடித்த நதி, பிஞ்சுக் கதறல்கள், வாலிபக் கூச்சல்கள், முதிய முனகல்கள். வெவ்வேறு குரல்களில் ஒரே ஓலங்கள். வீடு தீப்பற்றிவிட்டதே என்று திரும்பிப் பார்த்தால் ஆடை தீப்பற்றி எரிகிறது. ஆடை தீப்பற்றிவிட்டதே என்று அலறினால் தோல் தீப்பற்றி எரிகிறது.

“அம்மா என்னைக் காப்பாற்று” என்கிற குரல் அருகில்தான் கேட்கிறது. ஆனால், தன் தேகமே எரியும்போது பிள்ளையைத் தேட முடியாமல் தலைதெறித்து ஓடுகிறாள் தாய்.

எல்லாரும் உயிரைக் கையில் பிடித்து வீட்டை விட்டு ஓடிவந்து வெளியே பார்த்தால் தீப்பிடித்தோடும் தேகங்கள்… பாதி  முகம் கருகியவர்கள்.. தோல் வெந்து உடம்புக்கு வெளியே ஒழுகுகிறவர்கள். ஓடச் சக்தியற்று வீதியில் விழுந்து மிதிபட்டுச் செத்தவர்கள்… உறவுகளைக் கூவியழும் ஓலங்கள்…

சுட்டெரிக்கும் வெப்பத்தைத் தாங்க முடியாமலும் துரத்தி வரும் வெப்பத்தை வாங்க முடியாமலும் உலகத்தின் விளிம்புக்கே ஓடிப் போகலாம் என்று தறிகெட்டு விரைகிறவர்களின் கண்ணில் தட்டுப்பட்டுகிறது மோட்டோ நதி.

நதியில் விழிந்து நனைந்து நெருப் பணைக்கலாம்  என்று போனால் நீர்ப் பரப்பில் மிதந்து வந்துகொண்டு இருக்கின்றன ஆங்காங்கே பிணங்கள்.

 ஊர் ஒன்று தீப்பிடித்தால் நதி கொண்டு அணைக்கலாம். நதியே தீப்பிடித்தால் எது கொண்டணைப்பது?

ஹிரோஷிமாவைச் சுற்றியிருந்த மேகங்கள் ஆங்காங்கே மழை பொழிந்தன. முதலில் கொஞ்ச நேரம் கறுப்பு மழை பெய்தது. திரண்ட புகையின் திரவ வடிவம். ஊருக்கு வெளியே பெய்த பெருமழை நீள்விடாமல் நெருப்பை நிறுத்தியது. வெந்து தனிந்தது நகரம்!

.... இங்கே பதியப்பட்டது கவிதைகள் | 4 மறுமொழிகள் »