களஞ்சியம்

பார்த்தது… கேட்டது… படித்தது…

‘திரைப்பார்வை’ பகுப்புக்கான தொகுப்பு

ஆடவரி மாடலக்கு அர்தாலே வெறுலே…

பதிந்தவர் ரத்தன் மேல் மே 3, 2007

பதிவோட தலைப்ப பாத்தவொடனே என்னாடா இது தமிழ் மாதிரியே தெரியலேன்னு முழுக்கறீங்களா! நீங்க முழிக்கறது நியாயம் தாங்க. இது தமிழ் இல்ல, சுந்தரத் தெலுங்கு. சமீபத்துல ரிலீஸான தெலுங்கு படத்தோட டைட்டில் தான் இது. படத்தோட டைரக்டர் வேற யாரும் இல்லங்க, நம்ம செல்வராகவன் (தெலுங்குல ஸ்ரீராகவன்) தான். போன வாரம் ரிலீஸ் ஆகி  செம போடு போட்டுக்கிட்டு இருக்காம் இந்த படம். ஹீரோவா வெங்கடேஷ், ஹீரோயினா த்ரிஷா. இத தவிர ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த், காமெடிக்கு சுனில், சாமி வில்லன் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் எல்லாம் நடிச்சிருக்காங்க. இசை வழக்கம்போல யுவன் தான்.

amavrev2704_3c.jpg

இதே படத்த தான் யாரடி நீ மோகினி ன்னு தமிழ்ல எடுக்கராறு செல்வராகவன்கிட்ட உதவி இயக்குனரா இருந்த ஜவஹர்.  வெங்கடேஷ் கதாப்பாத்திரத்துல தனுஷ், த்ரிஷா கதாப்பாத்திரத்துல நயன்தாரா, ஸ்ரீகாந்த் கதாப்பாத்திரத்துல கண்ட நாள் முதல் புகழ் கார்த்திக் நடிக்கறதா இது வரயும் சொல்லிருக்காங்க. சாயாசிங் கூட ஒரு ரோல்ல நடிக்கறதா பேச்சு அடிபடுது.  தெலுங்கு படத்தோட கதைய இணையத்துல படிச்சேன். எப்படியும் இதே கததான் தமிழ்லயும் வரப்போகுதுங்குற தெனாவட்டுல (படத்தோட ரிலீஸுக்கு முன்னாடி) கதய லீக் பண்ணலாமேன்னு தான் இந்த முயற்சி ;-) .

yar1.jpg

கதை: 

வெங்கடேஷ் (கணேஷ்) வேல தேடிக்கிட்டுருக்குற ஒரு இளைஞன்.  இவரோட அப்பா கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஒரு வாத்தியார்.  வெங்கடேஷ அம்மா ஸ்தானத்துல இருந்து இவர் பாத்துக்கராரு. கணேஷோட ஃபிரண்ட்ஸ் எல்லாரும் நல்ல வேலைல செட்டில் ஆகிடறாங்க. ஆனா கணேஷ் மட்டும் கிட்டதட்ட பத்து வருஷமா (அடேங்கப்பா!)  வேல தேடுறாரு. வேல  தேடிக்கிட்டுருக்கற சமயத்துல இவரோட கண்ல த்ரிஷா (கீர்த்தி) படவே… இவருக்கு காதல் பொத்துக்கிட்டு வந்திடுது.  விசாரிச்சு பாத்து, கீர்த்தி ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேல பாக்கறாங்கன்னு தெரிஞ்சுக்கராரு கணேஷ். உடனே அவரும் மல மலன்னு கம்பியூட்டர் கத்துக்கிட்டு அதே கம்பெனில வேலைக்கு ட்ரயினியா சேர்றாரு (அடப்பாவிகளா!).  நெனச்சபடி கீர்த்தியோட ப்ராஜெக்ட்லயே சேர்றாரு. கீர்த்தி அதாவது த்ரிஷா தான் ப்ராஜெக்ட் மேனஜராம் (ப்ளீஸ், யாரும்  கோவப்படாதீங்க!).  படம் பாக்கற சாப்ட்வேர் மக்கள் எல்லாரும் யாரு காதுலடா பூ சுத்துறீங்க ன்னு கேக்கறாங்களாம். அந்த  அளவுக்கு எந்த ஒரு சாப்ட்வேர் கம்பெனிலயும் நடக்காத  விஷயத்தெல்லாம் காட்டிருக்காங்களாம். நம்ம ஹீரோ மட்டும் ப்ராஜெக்ட்காக ராத்திரியெல்லாம் கண்ணு முழுச்சு வேல பாக்கற மாதிரி காட்சியெல்லாம் இருக்காம்.

soft.jpg

கணேஷுக்கும், கீர்த்திக்கும் கம்பெனி மூலமா ஆஸ்ட்ரேலியா போக வாய்ப்பு கிடைக்குது (இதெல்லாம் சாப்ட்வேர் வாழ்க்கைல சகஜமப்பா :lol: ). இதாண்டா சமயம்னு தன்னோட காதல கீர்த்திகிட்ட சொல்றாரு கணேஷ். அத கேட்ட கீர்த்தி தனக்கு ஏற்கனவே தன்னோட மாமாவோட  நிச்சயம் ஆயிடிச்சுன்னு சொல்லி, மனசுல வீணா ஆசய வளத்துக்க வேண்டாம்னு வழக்கமான டயலாக் பேசறாங்க.  இத கேட்ட கணேஷ் ரொம்பவே மனசொடஞ்சு போயி தன்னோட அப்பாகிட்ட நடந்தத சொல்றாரு. தன்னோட மகன் ஆசப்பட்ட வாழ்க்கய அமச்சு கொடுக்கனும்னு அப்பா கீர்த்திக்கிட்ட போய் பேசுறாரு. இதனால கோவம் வந்து கணேஷயும், அவங்க அப்பாவயும் கீர்த்தி கை நீட்டி அடிச்சுடறாங்க.  அன்னக்கி ராத்திரி கணேஷோட அப்பா மாறடைப்பால இறந்து போயிடறாரு. கணேஷ் தனிமரமா அயிடுறான். கணேஷ் கவலய மறக்கடிக்க அவரோட ஃப்ரண்ட் வாசு (ஸ்ரீகாந்த்) கணேஷ தன்னோட ஊருக்கு கூட்டிட்டு போறாரு. அங்க போனதுக்கு அப்பறம் தான் வாசு கீர்த்தியோட மாமான்னு கணேஷுக்கு தெரிய வருது. ஒரு கட்டத்துல வாசுவோட தங்கச்சிக்கு கணேஷ் மேல காதல் வளர, அத ஏத்துக்க் முடியாத கீர்த்தி தன்னோட காதல கணேஷ்கிட்ட சொல்றாங்க. ஆனா தியாகி கணேஷ் தன்னோட காதலால சந்தோஷமா இருக்குற இந்த குடும்பத்துல பிரச்சன வேண்டாம், என்ன மறந்துடுன்னு சொல்றாரு.  இது  எப்படியோ வாசுவோட தாத்தாவுக்கு தெரியவர குடும்ப மானத்த கப்பலேத்திட்டியேன்னு கீர்த்திய திட்டுறாரு. இதுக்கு அப்பறம் யார் யாரோட சேர்றாங்கிறது  தான் க்ளைமாக்ஸாம்.

 படத்துல கணேஷ் கதாப்பாத்திரத்துக்கு நடிக்க நல்ல வாய்ப்பு இருக்காம். தனுஷ் கண்டிப்பா பிண்ணிருவாரு. ஆனா பத்து வருஷமா வேல தேடுற லாஜிக்கெல்லாம் அவருக்கு ஒத்து வராது. ஜவஹர் சார், இந்த மாதிரி விஷயத்தெல்லாம் கொஞ்சம் மாத்திருங்க ப்ளீஸ்!

கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைலயும் குடும்பத்தோட பாக்க வேண்டிய நல்ல படம்னு விமர்சனம் பண்ணிருக்காங்க. என்னாது! செல்வராகவன் படம் குடும்பத்தோட போய் பாக்கலாமா ன்னு  வாயப்பொளக்காதீங்க :-) . கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் மனுஷன் திருந்திட்டார் போலத் தெரியுது.  குடும்பஸ்தன் ஆயிட்டதனாலயோ என்னமோ வழக்கமா அவர் படத்துல வர்ற விரச காட்சி எதுவுமே இந்த படத்துல இல்லியாம். படத்துக்கு சென்சார் U சான்றிதழ் குடுத்திருக்காங்களாம். செல்வராகவன் படத்துக்கு U சான்றிதழா?  கேக்கவே ஆச்சர்யமா இருக்குல்ல ;-) . தமிழ்ல படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ஜவஹர் சார்.

.... இங்கே பதியப்பட்டது சினிமா, திரைப்பார்வை | 11 மறுமொழிகள் »

மொழி – என் பார்வை

பதிந்தவர் ரத்தன் மேல் ஏப்ரல் 8, 2007

ராதாமோகன் எடுக்கற அடுத்த படத்துல ஜோ வாய் பேச, காது கேக்க முடியாத கேரக்டர்ல நடிக்கறாங்கன்னு  சந்திரமுகி ரிலீஸாயி கொஞ்ச நாள் கழிச்சு நான் கேள்விப்பட்டேன். அப்பவே எனக்கு எதிர்பார்ப்பு அதிகமாயிடுச்சு. காரணம் அழகிய தீயே, பொன்னியன் செல்வன் ராதாமோகன் எடுத்திருந்த விதம் + என்னோட ஃபேவரைட் ஜோ :-) . அந்த எதிர்பார்ப்ப கொஞ்சம் கூட ஏமாத்தாம மொழியாக் குடுத்துருக்காரு ராதாமோகன். ரொம்ப ஆரோக்கியமான சினிமாவும் தமிழ்ல தொடர்ந்து ஜெயிக்கும்னு ப்ரகாஷ்ராஜ்/ராதாமோகன் வச்ச நம்பிக்கை வீண் போகல. ரெண்டு பேருக்குமே ஒரு சபாஷ். தொடர்ந்து ஜெயிக்க வாழ்த்துக்கள்.

mozhi.jpg

ஒரு காது கேக்க, பேச முடியாத ஹீரோயினுக்கும், இசைக் கலைஞனா இருக்கிற ஹீரோவுக்கு நடக்கற காதல் கதைதான் படம். இதக்கேட்ட உடனே படம் ஒரே ரொமான்டிக்கா, பொயட்டிக்கா இருக்குமோன்னு தான் நம்மல்ல பலர் நினப்போம். ஆனா இந்த படத்த ரொம்ப எளிமயா, கலகலப்பாவும் குடுக்க முடியும்னு சாதிச்சு காட்டிருக்காறு ராதாமோகன்.

  • படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துல தியேட்டரே கலகலன்னு கல்யாண வீடு மாதிரி ஆயிடுது. நடுவுல கொஞ்சம் இலுக்கற மாதிரி இருந்தாலும் ரசிக்கும்படியாவே இருக்கு. படத்துல பெரும்பாலான காட்சிகள்ல (70%) காமெடி தான். எல்லா காமெடியும் ரொம்ப இயல்பா கதையோட வந்து போறது படத்தோட பெரிய ப்ள்ஸ்.
  • ப்ரித்திவிராஜ் நல்ல தேர்வு. ரொம்பவே நல்லா நடிச்சிருக்காரு. எனக்கு காமெடியும் வரும்னு ப்ரகாஷ்ராஜ் ஒரு கை பாத்திருக்காரு. படத்துல நெறய கைத்தட்டல் வாங்குறது இவருதான். பெருசா காமெடிக்கின்னு எந்த கேரக்டர்ஸும் இல்ல. போடனுமேன்னு தெலுங்கு புகழ் பிரம்மானந்தத்த போட்டுருக்காங்க. மனுஷன பாத்தாலே நம்க்கு சிரிப்பு பிலிருக்கிட்டு வருது. புகுந்து விளையாடிருக்காரு. இந்த படத்துல ஜோவ பாத்தீங்கன்னா ஒரு காலத்துல ஓவர் ஆக்டிங் பண்ணின அந்த ஜோவா இதுன்னு தோனும். எங்கிட்ட ஜோவ பத்தி கிண்டல் பண்ணின நெறய பேர் நெஜமாவே சூப்பரா நடிச்சிருக்காடான்னு சொன்னாங்க. ஸ்வர்ணமால்யாவுக்கு அலைபாயுதேவுக்கு அப்பறம் நல்ல ரோல். நல்லா நடிச்சிருக்காங்க. இவங்க எல்லாரயும் விட நான் ரொம்ப ரசிச்ச கேரக்டர் ப்ரபெஸரா வர்ற எம்.எஸ்.பாஸ்கர். 1984ல நடக்கற விஷயத்த பத்தி சொல்லி சொல்லி சிரிக்க வச்சாலும் ஒன்னு ரெண்டு சீன்ல கண்கலங்க வச்சிர்றாரு. கலக்கிட்டீங்க பட்டாபி!
  • படத்தோட இன்னொரு பெரிய ப்ள்ஸ் விஜியோட வசனங்கள். ரொம்ப யதார்த்தமான சிரிக்க வக்கக்கூடிய அதே நேரத்துல அட போட வைக்ககூடிய வசனங்கள். அழகிய தீயே, பொன்னியின் செல்வன் க்கும் கூட இவர் தான் வசனகர்த்தாவாம். தமிழ் சினிமாவுக்கு இரட்டை அர்த்தம் இல்லாத, நல்ல வசனமும் எழுத முடியும்னு மூணாவது படத்துலயும் நிரூபிச்சிருக்காரு. நான் ரொம்ப ரசிச்ச வசனங்கள் சில இதோ
    • நீ பேச்சரல்னா வீடுதான் குடுக்க மாட்டேங்கறான்… நான் பேச்சரல்னா பொண்ணே குடுக்க மாட்டேங்கறான்டா.
    • அவன் அவன் கல்யாணத்த ஆகாயத்துல வக்கறான், பூமிக்கு அடில வக்கறான், நான் சர்ச்சுல தானேன்னு ஒ.கே சொல்லிட்டேன்.
    • ஸ்வர்: நீங்க சி.பி.ஐ ன்னு நான் எப்படி நம்பறது. பிரகா: நல்ல கேள்வி. நான் நடந்து போரேன். நீங்க சி.பி.ஐ ன்னு கூப்பிடுங்க நான் திரும்பிப் பாப்பேன்.
  • இசையப்பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகனும். தமிழ் சினிமால எவ்வளவு ஆர்ப்பாட்டமா குத்துப்பாட்டுக்கள் வந்தாலும் தன்னோட பானில எல்லா படத்திலயும் ஒரு மெலடி பாட்டு குடுக்கற வித்யாசாகர் இந்த படத்துல எல்லா பாட்டையுமே மெலடியா குடுத்திருக்காரு. இன்னொரு ஸ்பெஷல், எல்லாமே சோலோ பாடல்கள். அதுவும் வேறவேற சிங்கர்ஸ். பிரம்மானந்தம் பிரகாஷ்ராஜை முழுசா பாக்கற அந்த சீன்ல ஒலிக்கற அந்த ரிதம்மிக் பிண்ணனி இசை நம்ம சிரிப்ப இன்னும் அதிகமாக்குது. பிண்ணனி இசை முடிஞ்சு எல்லாரும் கைத்தட்டற மாதிரி வர்ற அந்த இடத்துல பிரம்மானந்ததோட அந்த எக்ஸ்பிரஷன் அய்யய்யோ! மரண காமெடிங்கோ!
  • பாடல் வரிகள் பாட்டுக்கு பெரிய முதுகெலும்பு. ஒவ்வொரு பாட்டும் அவ்வளவு அர்த்தமுள்ளதா அழகா எழுதிருக்காரு நம்ம கவிப்பேரரசு. காற்றின் மொழி… பாட்ட கேட்டா வைரமுத்துவால மட்டும்தாய்யா இப்படில்லாம் எழுதமுடியும்னு சொல்லுவீங்க. ராதாமோகன் முழு சுகந்திரம் குடுத்திட்டாறாம்.
  • ப்ரித்திவிக்கும், பிரகாஷ்ராஜுக்கும் லவ் ஆரம்பிக்கும் போது தலைக்கு மேல ப்ல்பு எரியறது மணி அடிக்கறது எல்லாம் நமக்கு சிரிப்ப வரவச்சாலும், கிளைமாக்ஸ்ல ப்ரித்திவியும் ஜோவும் சர்ச்சுக்கு வெளில ஒண்ணு சேர்ற அந்த காட்சில சர்ச்ச அலங்கரிக்க போட்டிருந்த மொத்த சீரியல் செட் லைட் எரிஞ்சு, சர்சோட ஆலயமணி அடிக்கும் போது நம்மலயே அறியாம புல்லரிச்சி போயி சூப்பர்ல் ன்னு சொல்ல வக்குது.

தியேட்டர விட்டு வெளில வர்ற எல்லாரும் இந்த மாதிரி ஒரு தமிழ் சினிமா குடும்பத்தோட பாத்து எவ்வளவு நாள் ஆச்சு ன்னு பெருமூச்சு விடறாங்க. மொழி ஆடியோ வெளியீட்டு விழாவுல பிரகாஷ்ராஜ் சொன்னது.

நம்ம சில நேரங்கள்ல செய்ற சில விஷயத்தினால நம்மலோட மனசு ரொம்ப சந்தோஷமா, நிறைவா இருக்கும். அது எனக்கு இந்த படம் எடுத்ததுக்கு அப்பறம் கிடைச்சிருக்கு.

பிரகாஷ்ராஜ் சார் எங்களுக்கு இந்த படம் பாத்ததுக்கு அப்பறம் அந்த மாதிரி இருக்கு சார் னு சொல்லத்தோனுது.

                                                                                                                                                                    -     ர த் த ன்

.... இங்கே பதியப்பட்டது சினிமா, திரைப்பார்வை | 8 மறுமொழிகள் »