களஞ்சியம்

பார்த்தது… கேட்டது… படித்தது…

‘நாட்டு நடப்பு’ பகுப்புக்கான தொகுப்பு

தினமும் நான் தெரிஞ்சிக்கிற சில நாட்டு நடப்பு விஷயங்கள்…

புஷ்ஷுக்கு எதிரான கோஷம்

பதிந்தவர் ரத்தன் மேல் ஏப்ரல் 13, 2007

டவுண்டவுன் ல ஆபீஸ் இருந்தா ரொம்ப இம்சைங்க. ஆத்திர அவசரதுக்கு கார எடுத்துக்கிட்டு வெளில போக முடியாது. எங்க பாத்தாலும் ஒரே ட்ராபிக்கா இருக்கும். எந்த ரோடு ஒன் வே எது டு வே ன்னே தெரியாது. அதவிட பெரிய கொடும பார்க்கிங் லாட்டே கிடைக்காது. அப்படியே கிடச்சாலும் அந்த கூட்டத்துல பேரளல் பார்க்கிங் பண்ணனும். அதுவும் பார்க்கிங் மீட்டர்ல வெரும் க்வாட்டர் டால்ர் காயின் தான் போட முடியும். இவ்வளவும் தெரிஞ்சிருந்தும் இன்னக்கி பெரிய இவம்மாதிரி “அம்மா, இன்னக்கி நான் வெளில சாப்பிட்டுக்கறேன்” னு சொல்லிட்டு வந்துட்டேன்.  மனசுக்குள்ள அப்பப்ப “மவனே உனக்கு இருக்குடி. அம்மா இந்தியா போனதுக்கு அப்பறம் தினமும் சமச்சே சாவப்போறே”ன்னு தோனும்.

7ஆவது மாடில பார்க் பண்ணிருக்கற என்னோட கார எடுத்திகிட்டு குஸிணோஸ் சப்ஸ் போலாம்னு கிளம்பினேன். வழக்கம் போல பாதைய மறந்துட்டேன். ஒரு வழியா கண்டுபிடிச்சி கடைக்கு பக்கத்துல போனா எதிர்பாத்த மாதிரியே பார்க்கிங் கிடைக்கல. ஒரு அஞ்சி நிமிஷம் ரவுண்டு அடிச்சதுக்கு அப்பறம் ஒரு லாட் கிடச்சது. இப்ப அடுத்த பிரச்சன “பேரளல் பார்க்கிங்” பண்ணனும். ம்ம்ம்… லைசன்ஸ் வாங்கினப்ப போட்டு காமிச்சது.  ஒரு வழியா தட்டு தடுமாறி வண்டிய பார்க் பண்ணிட்டு போய் திருப்தியா சாப்பிட்டேன். 

ஆஸ்டின் நகரம் டெக்ஸாசோட தலைநகரம்ங்கிறதால ஸ்டேட் கேப்பிட்டல் பில்டிங் இங்கதான் இருக்கு.  டவுண்டவுன் மத்தியில  பிரம்மாண்டமா, கம்பிரமா, அழகா பரந்து விரிஞ்சு இருக்கு. அதுக்கு பக்கத்துல தான் இந்த கடை. சாப்பிட்டு முடிச்சு கார எடுத்திட்டு கிளம்புனதும் ஒரு சிக்னல். ஸ்டேட் காப்பிட்டல் பில்டிங்குக்கு நேர் எதிர்ல சிக்னலுக்கு முன்னாடி கார்ல உக்காந்திட்டு இருந்தேன். அப்ப பக்கத்துல ஒரு பெரியவரு ஒரு பெரிய போர்ட்ல ஏதோ எழுதி வச்சி நின்னுகிட்டுருந்தது கண்ணுல பட்டுச்சு. அதுல எழுந்திருந்த முதல் வார்த்தைய படிச்சவுடனே ஆரம்பிச்சிட்டீங்களாடா ன்னு நெனச்சேன். முழுசா படிச்சுப்பாத்ததும் ரொம்ப ஆச்சர்யப்பட்டேன். அதுல அதிபர் புஷ் பத்தி தகாத வார்த்தைகள்ல எழுதிருந்தது. மொபைல் கேமராவில இத ஒரு போட்டோ எடுத்தா என்னன்னு நினைக்கும் போது இது வரையும்  சிகப்புல இருந்த சிக்னல்,   பளீர் னு பச்சைக்கு மாறிடுச்சி. வண்டிய ஒட்டிக்கிட்டே வர்ற வரையும் வரட்டும்! ஒரு ட்ரை குடுக்கலாம்னு க்ளிக் பண்ணினேன். பாத்தா போட்டோ நான் எதிர்பார்த்தத விட நல்லாவே வந்திருந்தது.  இதோ அந்த போட்டோ கிழே உங்களுக்காக.

calvingraphics.jpg
13042007.jpg

போட்டோ பெருசா தெரியணும்னா இந்த குட்டி போட்டோவ க்ளிக் பண்ணுங்க.

ஆபீஸ் போய் சேர்ந்ததுக்கு அப்பரம் கொஞ்ச நேரம் கழிச்சு என் மனசுக்குள்ள இந்த மாதிரி நம்ம ஊர் சிக்னல்ல எவனாவது ஆளுங்கட்சிக்கு எதிரா எதாவது எழுதி நின்னுகிட்டு இருந்தா என்ன ஆகும் னு நெனச்சேன். லேசா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு என்னோட அபீஸ் வேலய பாக்க ஆரம்பிச்சுட்டேன்.

.... இங்கே பதியப்பட்டது என் நினைவுகள், நாட்டு நடப்பு | 3 மறுமொழிகள் »

இன்னும்மாய்யா நீங்க திருந்தல?

பதிந்தவர் ரத்தன் மேல் ஏப்ரல் 9, 2007

மும்பை, ஏப் 9: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் கேவலமாக விளையாடி நாடு திரும்பியுள்ள இந்திய அணியை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை வாரியம் அறிவித்துள்ளது.அதில் முக்கியமானது, விளம்பரப் படங்களில் நடிக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்.  இதோ அவை

  • ஒரு வீரர் ஒரு போட்டித் தொடருக்கு 3 நிறுவனங்களுக்கு மட்டும் நடிக்கலாம்.
  • போட்டிக்கு 15 நாட்களுக்கு முன்பே விளம்பரப் படங்களில் நடித்து முடித்து விட வேண்டும்.
  • மேலும் விளம்பரப் படங்களில் நடிப்பதற்கும், விளம்பரங்களில் ஒப்பந்தமாவதற்கும் கிரிக்கெட் வாரியத்தின் முன் அனுமதியையும் வீரர்கள் பெற வேண்டும்.

இதனால் சகட்டு மேனிக்கு விளம்பரப் படங்களில் நடித்து வரும் மூத்த வீரர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சச்சின் டெண்டுல்கருக்கு கிட்டத்தட்ட ஆண்டுக்கு ரூ. 15 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இதனால் டிராவிட், சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கேப்டன் டிராவிட், வாரிய நிர்வாகத்திடம் பேசத் திட்டமிட்டுள்ளார்.

ஆனால் வீரர்கள் விளம்பரக் கட்டுப்பாடு குறித்து கவலைப்படுவதை விட்டு விட்டு விளையாட்டில்தான் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என கிரிக்கெட் வாரிய பொதுச் செயலாளர் நிரஞ்சன் ஷா காட்டமாக கூறியுள்ளார். 

இம்புட்டு அசிங்கப்பட்டதுக்கு அப்பறமுமாய்யா நீங்க திருந்தல.

.... இங்கே பதியப்பட்டது நாட்டு நடப்பு | 3 மறுமொழிகள் »

இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்: நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

பதிந்தவர் ரத்தன் மேல் ஏப்ரல் 6, 2007

ஏப்ரல் 06, 2007

நாகப்பட்டனம்: கோடியக்கரை அருகே நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் காயமடைந்தார்.

தமிழக மீனவர்களை குறி வைத்து சமீப காலமாக இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக சுடுவது அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 மீனவர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு இதில் தீவிரமாக செயல்பட்டு இலங்கையை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

ஆனால் மத்திய அரசின் சார்பில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் இல்லை. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏ.கே.ஆண்டனியிடம் இதுகுறித்து கேட்டால், இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சுட வேண்டிய அவசியம் இல்லை என்று இலங்கை அரசின் அமைச்சர் போல பதிலளிக்கிறார்.

இந்த நிலையில் இன்றும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 7 மீனவர்கள், 2 நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.

இன்று அதிகாலை அவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், சண்முகவேல் என்ற மீனவரின் காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தார்.

திரும்பத் திரும்ப இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.

.... இங்கே பதியப்பட்டது நாட்டு நடப்பு | 4 மறுமொழிகள் »

சிக்கிட்டான்யா… சிக்கிட்டான்யா…

பதிந்தவர் ரத்தன் மேல் ஏப்ரல் 5, 2007

ibrahim.jpg

சுட்டது : தட்ஸ்தமிழ்.காம் ல இருந்து

ஏப்ரல் 05, 2007 

சென்னை: சென்னை நகரில் வீடுகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தி நகரையே பரபரப்பில் ஆழ்த்தியவர் குப்பை பொறுக்கும் இளைஞர் என்பது தெரிய வந்துள்ளது. அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

சென்னை நகரில் அசோக் நகர், கே.கே.நகர், விருகம்பாக்கம், வடபழனி ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வீடுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், லாரிகள், ஆட்டோக்கள் ஆகியவை மர்மமான முறையில் தீவைத்து எரிக்கப்பட்டன.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியது. யார் இந்த செயலில் ஈடுபடுவது என்று தெரியாமல் போலீஸார் குழம்பி வந்தனர். மர்ம நபர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில், லிங்கேஸ்வர் நகர் என்ற பகுதியில், ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்ததை தனிப்படை போலீஸார் பார்த்து அவரை அணுகி விசாரித்தனர். போலீஸாரிடம் அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரைக் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்று விசாரித்ததில் அவர்தான் வாகனங்களைக் கொளுத்திய ஆசாமி என்பது தெரிய வந்தது.

அவரது பெயர் சையத் இப்ராகிம் (33). தெருக்களில் குப்பை பொறுக்கி பிழைத்து வருபவர். கடந்த 3 மாதங்களாக இப்படி வாகனங்களைக் கொளுத்தும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்த தகவல்கள் இப்ராகிமின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆகும். அவரது பெற்றோர் தற்போது பட்டுக்கோட்டையில் வசிக்கின்றனர். தந்தை பெயர் அப்துல் மஜீத், தாயார் பெயர் சுபேதா.

15 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு சென்னைக்கு வந்துள்ளார் இப்ராகிம். பழைய பேப்பர், இரும்புப் பொருட்களை சேகரித்து விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்ந்து வந்தார்.

வடபழனி சிவன் கோவில் பிளாட்பாரம்தான் இவரது இருப்பிடமாக இருந்து வந்தது. பேப்பர் பொறுக்குவதில் போதிய வருமானம் கிடைக்காததால் அவ்வப்போது சிறு சிறு திருட்டிலும் ஈடுபட்டு வந்தார். இதுதொடர்பாக 6 முறை கைதாகி சிறைக்கும் சென்றுள்ளார்.

இப்ராகிமுக்கு சமையல் வேலையும் தெரியுமாம். சமையல்காரராக வேலை பார்க்கலாம் என முடிவு செய்து அந்த வேலைக்கு முயற்சித்துள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதனால் விரக்தியுற்றுத்தான் இப்படி வாகனங்களைக் கொளுத்தத் தொடங்கினாராம்.

திருடப் போகும் இடத்தில் பொருட்கள் இல்லாவிட்டால் அங்கு கொடியில் காயும் துணிகளை எரித்து விடுவாராம். இல்லாவிட்டால் கார் சீட்களை கத்தியால் குத்திக் குதறி விட்டுப் போவாராம். சில நேரங்களில் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டுப் போவாராம்.

இப்ராகிமுக்கு லேசான மன நல பாதிப்பும் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவரே போலீஸாரிடம் கூறியுள்ளார். அவருக்கு 18 வயது இருக்கும்போது, தனது பெரியப்பாவின் மகனும், மகளும் முறை கெட்ட உறவில் ஈடுபட்டுள்ளனர். அதை இப்ராகிம் பார்த்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பெரியப்பாவிடம் சொல்லியுள்ளார். இதுதொடர்பாக பெரியப்பா குடும்பத்துக்கும், இப்ராகிம் குடும்பத்துக்கும் சண்டை வந்துள்ளது. இதில் கோபமடைந்த இப்ராகிமின் தந்தை மகனை அடித்து வீட்டை விட்டு விரட்டியுள்ளார். அந்த கோபத்தில்தான் அவர் சென்னைக்கு வந்துள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் அவருக்கு லேசான மன நல பாதிப்பு ஏற்பட்டதாம்.

கைது செய்யப்பட்ட இப்ராகிமை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

.... இங்கே பதியப்பட்டது நாட்டு நடப்பு | Leave a Comment »

கிரிக்கெட்… இந்தியா உருப்படுமா…

பதிந்தவர் ரத்தன் மேல் ஏப்ரல் 5, 2007

கிரிக்கெட் உலக கோப்பைல இந்தியா சூப்பர் 8 ல கூட போக முடியாம வெளில வந்தத பத்தி நம்ம எல்லாருக்குமே தெரியும்… இனியாவது உருப்படுறதுக்கு என்ன வழி… இதோ தினமலர்ல வந்த ஒரு கட்டுரை…

1.jpg   2.jpg   3.jpg   4.jpg   5.jpg

ஆகா இவ்வளவு பண்ணனுமா… கஷ்டம்தான்…

.... இங்கே பதியப்பட்டது நாட்டு நடப்பு | Leave a Comment »